
பயணம்
- Pradeep Kamaraj
- Mar 23, 2024
- 1 min read
பயணம்
தொடங்கும்போது ஆர்வத்துடன் வேகத்தையும் தரும்,
நாம் கவலையின்றி செல்ல சில ஆச்சர்யங்கயும் தரும்,
நம்மை பக்குவப்படுத்த பல தடைகளையும் தரும்,
அதனை கடந்து செல்ல பல வழிகளையும் தரும்...
சுவடை கண்டு பயந்தவன் பாதியிலேயே வெளியேறுவான்
அதில் வெல்லநினைக்கிறவன் தனிமையால் தடம்மாறுவான்
ஆனால்
பயணத்தை ரசிக்கத்தெறிந்தவனே மகிழ்வாய் முன்னேறுவான்
ரசித்தமனம் ரசனைமறந்து
பார்த்தவிழி பார்வைமறைத்து
நடந்தகால்கள் நடக்கமறுத்து
இளமைக்காலம் முதுமைத்தரித்து
பயணத்தின் முடிவில் திரும்பி பார்க்கும்போது
நம் சுவடுகளில் வலியும், சுகமும், இன்பமும், துன்பமும், நட்பும், காதலும், வெறும் நினைவுகளாய் நின்று நம்மை வழியனுப்பும்.....
திரும்பமுடியத வேறொரு பயணத்திற்கு....









Comments